Learn Forex In Tamil

This is the Best Place to Learn Forex in Tamil

Learn Forex In Tamil

This is the Best Place to Learn Forex in Tamil.

Learn Forex In Tamil

This is the Best Place to Learn Forex in Tamil.

Learn Forex In Tamil

This is the Best Place to Learn Forex in Tamil.

Learn Forex in Tamil

This is the Best Place to Learn Forex in Tamil.

Wednesday, October 14, 2020

Top 10 Chart Pattern - சிறந்த 10 விளக்கப்பட வடிவங்கள்.


 விளக்கப்படம் வடிவங்கள் தொழில்நுட்ப பகுப்பாய்வின் ஒருங்கிணைந்த அம்சமாகும்.ஆனால் அவை திறம்பட பயன்படுத்தப்படுவதற்கு அவற்றைப் எவ்வாறு எங்கு எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதை தெருந்துஇருக்க வேண்டும் .

ஒரு விளக்கப்படம் என்பது கடந்த காலங்களில் சந்தை  ஏற்படுத்திய நகரவுகளின்  அடிப்படையில் உருவானது, அது  அடுத்து சந்தையில்  என்ன நகர்வுகளை ஏற்படுத்த கூடும்  என்பதைக் குறிக்க உதவுகிறது. 

உங்களுக்கு உதவ, ஒவ்வொரு வர்த்தகரும் தெரிந்து கொள்ள வேண்டிய 10 விளக்கப்பட வடிவங்கள் இங்கே.


Top 10 chart patterns

Head and shoulders - தலையும் தோள்களும்

Double top - இரட்டை மேல் முனை.

Double bottom - இரட்டை கீழ்  முனை.

Rounding bottom - கீழ் வளைவு  வடிவம்.

Cup and handle -  கோப்பை மற்றும் கைப்பிடி

Wedges - ஆப்பு

Pennant or flags - பென்னன்ட அல்லது கொடி வடிவும் 

Ascending triangle - ஏறும் முக்கோணம்

Descending triangle - இறங்கு முக்கோணம்

Symmetrical triangle - சமச்சீர் முக்கோணம்


Head and shoulders - தலையும் தோள்களும்

"தலை மற்றும் தோள்கள்" ஒரு விளக்கப்பட வடிவமாகும், இது நடுவில்  ஒரு பெரிய சிகரம் அதன் இருபுறமும் சற்று சிறிய சிகரம் கொண்ட வடிவத்தை கொண்ட அமைப்பு ஆகும்.

இந்த வடிவமானது சந்தை ஏறுமுகத்தில் இருந்து இறங்குமுகமாக மாறுவதற்கான ஒரு அமைப்பு ஆகும்.

பொதுவாக, முதல் மற்றும் மூன்றாவது சிகரம் இரண்டாவது விட சிறியதாக இருக்கும்.  அதாவது நடுவில் இருக்கும் கூர்மையான அமைப்பின் உயரம் இரு புறமும் இருக்கும் உயரத்தை விட அதிகமாக இருக்கும்.

Double top - இரட்டை மேல் முனை.

வர்த்தகர்கள் பயன்படுத்தும் முக்கியமான தொழில்நுட்ப பகுப்பாய்வுகளில்  இரட்டை மேல் முனையும் (Double top) ஒன்று ஆகும்.
இரட்டை மேல் முனை ஒரு 'M' வடிவத்தைக் கொண்டுள்ளது மற்றும் இது சந்தை கீழ் நோக்கி திசை திரும்புவதற்கான ஒரு சமிக்கையை தருகிறது.

Double bottom - இரட்டை கீழ்  முனை.

வர்த்தகர்கள் பயன்படுத்தும் முக்கியமான தொழில்நுட்ப பகுப்பாய்வுகளில்  இரட்டை கீழ்  முனையும் (Double bottom) ஒன்று ஆகும்.
இரட்டை கீழ்  முனை ஒரு 'W' வடிவத்தைக் கொண்டுள்ளது மற்றும் இது சந்தை மேல் நோக்கி திசை திரும்புவதற்கான ஒரு சமிக்கையை தருகிறது.

Rounding bottom - கீழ் வளைவு  வடிவம்.


ஒரு 'U' வடிவத்தைக் கொண்டுள்ளது மற்றும் இது சந்தை மேல் நோக்கி திசை திரும்புவதற்கான ஒரு சமிக்கையை தருகிறது.

இது சந்தை சரிவின் (Bearish) முடிவையும் சந்தை உயர்வுக்கான (Bullish) ஆரம்பம் என்பதை  குறிக்கிறது.




Cup and handle -  கோப்பை மற்றும் கைப்பிடி.

ஒரு கப் மற்றும் கைப்பிடி என்பது ஒரு கோப்பையை போன்று காட்சி  அளிக்கும்  விளக்கப்படம் மற்றும் கோப்பை ஒரு "U " வடிவத்தில் இருக்கும் மற்றும் கைப்பிடி சற்று கீழ்நோக்கி சாய்வான கோடு  போன்று கீழ் உள்ள படத்தில் உள்ளது போல் இருக்கும். இந்த அமைப்பு சந்தை தொடர்ந்து மேல்  நோக்கி செல்வதற்கான சமிக்கையை தருகிறது .



Wedges - ஆப்பு.


சந்தையின் விலை இயக்கங்கள் இரண்டு சாய்வான போக்குக் கோடுகளுக்கு இடையில் இறுக்கமாக ஆப்பு போன்று வடிவில் உருவாகிறது.

ஆப்பு (Wedge) இரண்டு வகைகள் உள்ளன: உயரும் மற்றும் வீழ்ச்சி வெட்ஜெஸ் .


உயரும் வெட்ஜ் (Rising Wedge)


வீழ்ச்சி வெட்ஜ் (Falling Wedge)


Pennant or flags - பென்னன்ட அல்லது கொடி வடிவும் 

கொடிகள் மற்றும் பென்னன்ட்கள் விளக்கப்படங்கள் குறுகிய கால தொடர்ச்சியான முறைகள் (Short term continuation) ஆகும், அவை முந்தைய போக்கை அல்லது நகர்வை மீண்டும் தொடங்குவதற்கு முன்பு ஒரு சிறிய சுணக்கத்தை (consolidation) ஏற்படுத்தும். இந்த வடிவங்கள் வழக்கமாக ஒரு பெரிய நகர்வு ஏற்படுவதற்க்கு  முன்பு தோன்றுவது ஆகும் .







Ascending triangle - ஏறு முக்கோணம்


விலையின் நகர்வுகளுக்கு ஏற்ப இந்த அமைப்பு ஏற்படுத்த படுகிறது. இது ஒரு கிடைமட்ட கோட்டை ஸ்விங் உயரத்துடனும் (Highs),  ஒரு சாய்வு உயர போக்கு கோடானது ஸ்விங் தாழ்வோடும்(lows) இணைத்து வரைய கூடியது .



Descending triangle - இறங்கு முக்கோணம்


இறங்கு முக்கோணம் என்பது அதன் கிடைமட்ட போக்கு கோடு வரிசையில் கீழே ஆதரவையும்(Support ), இறங்கு செங்குத்து போக்கு கோடு வரிசையில் உயர்வையும்(Resistance) கொண்ட ஒரு விளக்கப்படம் ஆகும்.



Symmetrical triangle - சமச்சீர் முக்கோணம்

ஒரு சமச்சீர் முக்கோணம் என்பது தொடர்ச்சியான உயர்வுகளையும் தாழ்வுகளையும் இணைக்கும் இரண்டு ஒன்றிணைக்கும் போக்கு கோடுகளால் வகைப்படுத்தப்படும் ஒரு விளக்கப்படம். போக்கு கோடுகள்(Trend Lines) தோராயமாக சம சரிவில் ஒன்றிணைந்திருக்கும்.




Friday, June 12, 2020

Value per pip


Pip Calculator widget is provided by DailyForex.com - Forex Reviews and News

Friday, July 19, 2019

Position Size & Risk Calculator


Position Size Calculator widget is provided by DailyForex.com 

Saturday, June 8, 2019

வங்கிகள் சிறு வணிகர்களை நஷ்டம் அடைய வைக்கின்றனவா? Does Banks manipulating the trading in Forex ?

வணக்கம்,

Forex வணிகத்தில் institutional வணிகர்கள் (Retail Traders)ரீடெய்ல் வணிகர்களை நஷ்டம் அடைய வைக்கின்றனவா?

சில டிரேடர்கள் தங்களுடைய  டிரேடிங்(Trading) தொடர்ந்து கண்காணிக்கப்படுவதாகவும் அவர்களுடைய  stop loss விலையை சந்தை அடைந்த பின்னர் டேக் ப்ராபிட் (Take Profit) திசை நோக்கி நகர்வதாக கருதுகின்றனர்.  அதாவது யாரோ பின்புலத்திலிருந்து வேண்டுமென்றே அவர்களை நஷ்டமடைய வைப்பதாக கருதுகின்றனர். இது உண்மையா?

இது ஒரு வகையில் உண்மை.  முற்றிலும் உண்மை அல்ல. இதை மேலும் விளக்கமாக காண்போம்.

இந்த சந்தையானது பையர் செல்லர் (Buyer & Seller)  அதாவது வாங்குபவர் மற்றும் விற்பவர் இருவராலும் நகர்த்தப்படும் ஒரு சந்தை.  வாங்கலும் விற்றலும் நடைபெறவில்லை என்றால் சந்தையில் நகர்வு என்பது இருக்காது.

அதுபோல்  சந்தையில் ஏற்கனவே செல்லர் இருந்தால்தான் பையர் buy பண்ண முடியும்.

ஒரு செல்லர்(SELLER) கூட இல்லையெனில் உங்களால் (BUY)பை பண்ணவே  முடியாது. இந்த சந்தை 24 மணி நேரமும் மிக அதிக அளவிலான பணம் மற்றும் வணிகர்களை கொண்டு உலகம்  முழுவதும் வணிகம் நடைபெறுவதால் பை மற்றும் செல்லிங் (BUYING & SELLING ) ஒவ்வொரு நொடிக்கு நொடி நடந்து கொண்டே இருக்கிறது.  ஆனால் உதாரணமாக நீங்கள் ஒரு பத்து லாட் பை (BUY) செய்ய விரும்பினால் பத்து லாட் செல்லர்(SELLER) இருக்க வேண்டும் இல்லை எனில் உங்களால் அந்த வணிகத்தை தொடர முடியாது. இதை ரீடெய்ல் ட்ரேடர்ஸ் ஆகிய நாம் தெரிந்திருக்க அதிக வாய்ப்பு இல்லை.

இந்த சந்தையில்  பத்து லாட் என்பது மிகச் சிறியது.  பத்து லாட்டிற்கான வணிகத்தை எளிதில் பெற்று விடலாம்.  ஆனால் 10,000 லாட் வணிகத்தை ஏற்படுத்த வேண்டும் எனில் சற்று சிரமம். சில சமயம் institutional  வணிகர்கள் நூறு ஆயிரம் லார்ட் வணிகத்தை கூட செய்வார்கள். அதற்கு சந்தையில் வணிகர்கள் இல்லாதபோது அவர்கள் அந்த வணிகர்களை வர முயற்சிப்பார்கள்.  அதாவது அவர்கள் பை (BUY) செய்ய விரும்பினால் அவர்களுக்கு செல்லர் (SELLER)தேவை. எனவே சந்தையை செல் திசையை நோக்கி நகர்த்துவார்கள். டெக்னிக்கல் டிரேடர்ஸ்,   indicator உபயோகிப்பவர்கள், ரெசிஸ்டன்ஸ் சப்போர்ட் பின்பற்றி வாணிகம் தொடர்பவர்கள் மேலும் பல டெக்னிக்கல் அனலைசிஸ் முறையை பின்பற்றுபவர்கள் அனைவரும் இதில் ஏமாற்றப்படுவார்கள்.
10,000 லாட் buy வணிகத்தை ஏற்படுத்த முதலில் ஆயிரம் லார்ட் செல் வணிகத்தை ஏற்படுத்துவார்கள்.  பெரிய volume எந்த திசையில் ஏற்படுத்தப்படுகிறது அந்த திசையை நோக்கி சந்தை நகர்வைத் தொடரும். பெரிய வால்யூம் என்பது  BUY அல்லது SELL எந்த திசையில் அதிகம் உள்ளதோ அந்த திசையில் சந்தை நகரும். முதலில் செல் திசையில் பெரிய volume வணிகத்தை ஏற்படுத்தி தங்களுக்கு தேவையான  (SELLERS)செல்லர்சை கொண்டு வந்து அவர்களிடமிருந்து BUY செய்துகொள்வார்கள். பின்பு சந்தை பை(BUY) திசைநோக்கி நகரத் தொடங்கும். (SELLER) செல்லர் அனைவரும் நஷ்டம் அடைவார்கள்.

முடிந்தவரை இதில் தெளிவுபடுத்த முயற்சித்துள்ளேன்.  மேலும் தெளிவாக தெரிந்து கொள்ள வீடியோ பதிவை பாருங்க .

Wednesday, May 29, 2019

நிதி மேலாண்மை (MONEY MANAGEMENT)

வணக்கம்,
வணிகச் சந்தையில் நிதி மேலாண்மை செய்வது பற்றி காண்போம்.


நிதி மேலாண்மையில் முதன்மையானது  எது?


சிலர் வணிகத்தை தொடங்கும்போது எவ்வளவு லாபம் சம்பாதிக்க வேண்டும் என்பதை மட்டுமே கவனத்தில் கொள்வர்.


சந்தையில்  லாபம் சம்பாதிக்க வால்யூம் அல்லது lot size  உள்ளீடு செய்தாலே போதும் என்று கருதுகின்றனர். அதை தான் முதன்மையாக  கருதுகின்றனர். அது தவறு.


வணிகத்தை தொடங்கும்போது நம்முடைய நஷ்ட மதிப்பை கட்டுக்குள் வைத்துக் கொண்டாலே நல்ல லாபத்தை அடைய முடியும்.


எனவே சந்தையில் lot size உள்ளீடு செய்வதைவிட நஷ்ட  எல்லை அதாவது stop loss தீர்மானிப்பதே முதன்மையானது.


வணிகத்தில் ஈடுபடும்போது stop loss அளவு தெரிந்தால் மட்டுமே நமக்குத் தேவையான lot size என்ன என்பதை கணக்கிட முடியும்.


நீங்கள் தேர்வுசெய்யும் lot size நீங்கள் வணிகத்தில்  வெற்றியாளரா இல்லையா என்பதை தீர்மானிக்கும்.

நீங்கள் தேர்வுசெய்யும் lot sizeதான் உங்கள் வணிகத்தின் நஷ்ட அளவை கட்டுக்குள்வைக்க உதவும்.


உங்கள் வணிக உத்தி அல்லது வணிக முறை வெற்றி பெற lot size தேர்வு செய்வதில் கவனம் செலுத்த வேண்டும்.


எவ்வளவுதான் சிறந்த  வணிக யுத்தியை பின்பற்றினாலும் தவறான lot size தேர்வினால் அது தோல்வியில் முடியலாம்.


Lot size நஷ்ட புள்ளிகளின் அளவை வைத்தே தீர்மானிக்கப்படுகிறது.  


வெவ்வேறான சந்தையின் நிலவரம் நமக்கு வெவ்வேறு அளவிலான நஷ்ட புள்ளிகளை நமக்கு கொடுக்கும்.


எனவே  lot size ஒவ்வொரு வணிகத்திற்கும் வேறுபடும்.


சரியான  Lot size அளவை எப்படி கணக்கிடுவது?


Lot size அல்லது பொசிஷன் சைஸ் எவ்வாறு கணக்கிடுவது என்பதை பின்வரும் ஒரு ஃபார்முலா மூலமாக காண்போம்.

lot size =      முதலீடு X ஒரு வணிகத்தின் நஷ்ட விகிதம்
                  ------------------------------------------------------------------------
                   நஷ்ட எல்லை புள்ளி X புள்ளி நகர்வின் மதிப்பு

Lot size/ Volume =  Capital X Risk per trade
                                 ----------------------------------
Stop loss pips X value per pip


அனைத்து வணிகத்திற்கும் ஒரே அளவிலான lot size தேர்வு செய்ய விரும்பினால் உங்களுடைய   வணிக முறையில் கிடைக்கப்பெறும் சராசரி ஸ்டாப் லாஸ் அளவு புள்ளி அடிப்படையில் lot size கணக்கிட வேண்டும்.


புதிதாக வணிகம் தொடங்கும் வணிகர்கள் செய்யும் பொதுவான தவறு.  ஒரு வணிகம் நஷ்ட திசையில் பயணிக்கும்போது நஷ்ட எல்லை புள்ளியை அதிகரித்துக்கொண்டே செல்வது ,


லாப எல்லையை அடைவதற்கு முன்பாகவே வணிகத்தை முடித்துக்கொள்வது,


வணிக  முறையை சரிவர பின்பற்றாமல் இருப்பது


இந்த அனைத்து தவறுகளையும் சரி செய்து கொள்ள வேண்டும்.  நிதி மேலாண்மையில் இவை அனைத்தும் முக்கியமானவை.


நன்றி

Saturday, September 29, 2018

மாதம் குறைந்த பட்சம் 1000 புள்ளிகள் சம்பாதிக்க

இந்த சந்தையில் இரண்டு விதமான analysis உள்ளது. Technical மற்றும் fundamental அனாலிசிஸ்.
Technical Analysis ஒன்றும் கடினமானது அல்ல. அது கடினமானது என்று மக்களிடம் பரவலாக நம்ப வைக்க பட்டுள்ளது. மிக பெரிய உலக வங்கிகள் (Liquidity Providers ) மற்றும் மிக பெரிய தொகை கொண்டு இந்த சந்தையில் trade செய்யபவர்கள் எல்லாம் மிக மிக எளிய முறையைத்தான் கையாள்கிறார்கள்.
Retail traders களாகிய நம் போன்ற சிறு trader கள் தான் Technical analysis ஐ கடினமாக்கி கொண்டு தெளிவில்லாமல் trade செய்து நஷ்டம் அடைகிறோம்.
Chart ல் குறுக்கம் நெடுக்குமாக கோடுகளை வரைவது , பல Indicator களை chart ல் நிறுவுவது , புரிந்துகொள்ள கடினமான Indicator ஐ பயன்படுத்தி analyse செய்தால்தான் லாபம் அடைய முடியம் என கருதுவது , Harmonic pattern, Elliot Waves போன்ற புரிந்துகொள்ள கடினமான முறையை பயன்படுத்தி analyse செய்தால்தான் லாபம் அடைய முடியம் என கருதுவது எல்லாம் தவறு .
இந்த சந்தையில் உள் நுழைந்து முதல் நாம் இவ்வாறு நம்ப வைக்க பட்டுள்ளோம். உண்மையில் அப்படி எந்த கடினமான முறையும் தேவை இல்லை. மிக மிக எளிய முறையில் Technical Analysis செய்ய முடியும். எந்த வித Indicator களும் தேவை இல்லை .
என்னைப் பொறுத்த வரையில் எந்த அளவுக்கு இந்த சந்தையை எளிமையாக கையாளுகிறமோ அந்த அளவுக்கு லாபம் சம்பாதிக்க முடியும் .நான் எந்த வித Indicator இல்லாமல் எந்த வித கடினமான முறையும் கையாளாமல் மிக எளிமையாக மாதம் குறைந்த பட்சம் 1000 புள்ளிகள் சம்பாதிக்க கற்று கொடுக்கிறேன் .
WhatsApp: +919698220033