Friday, July 19, 2019
Saturday, June 8, 2019
வங்கிகள் சிறு வணிகர்களை நஷ்டம் அடைய வைக்கின்றனவா? Does Banks manipulating the trading in Forex ?
வணக்கம்,
Forex வணிகத்தில் institutional வணிகர்கள் (Retail Traders)ரீடெய்ல் வணிகர்களை நஷ்டம் அடைய வைக்கின்றனவா?
சில டிரேடர்கள் தங்களுடைய டிரேடிங்(Trading) தொடர்ந்து கண்காணிக்கப்படுவதாகவும் அவர்களுடைய stop loss விலையை சந்தை அடைந்த பின்னர் டேக் ப்ராபிட் (Take Profit) திசை நோக்கி நகர்வதாக கருதுகின்றனர். அதாவது யாரோ பின்புலத்திலிருந்து வேண்டுமென்றே அவர்களை நஷ்டமடைய வைப்பதாக கருதுகின்றனர். இது உண்மையா?
இது ஒரு வகையில் உண்மை. முற்றிலும் உண்மை அல்ல. இதை மேலும் விளக்கமாக காண்போம்.
இந்த சந்தையானது பையர் செல்லர் (Buyer & Seller) அதாவது வாங்குபவர் மற்றும் விற்பவர் இருவராலும் நகர்த்தப்படும் ஒரு சந்தை. வாங்கலும் விற்றலும் நடைபெறவில்லை என்றால் சந்தையில் நகர்வு என்பது இருக்காது.
அதுபோல் சந்தையில் ஏற்கனவே செல்லர் இருந்தால்தான் பையர் buy பண்ண முடியும்.
ஒரு செல்லர்(SELLER) கூட இல்லையெனில் உங்களால் (BUY)பை பண்ணவே முடியாது. இந்த சந்தை 24 மணி நேரமும் மிக அதிக அளவிலான பணம் மற்றும் வணிகர்களை கொண்டு உலகம் முழுவதும் வணிகம் நடைபெறுவதால் பை மற்றும் செல்லிங் (BUYING & SELLING ) ஒவ்வொரு நொடிக்கு நொடி நடந்து கொண்டே இருக்கிறது. ஆனால் உதாரணமாக நீங்கள் ஒரு பத்து லாட் பை (BUY) செய்ய விரும்பினால் பத்து லாட் செல்லர்(SELLER) இருக்க வேண்டும் இல்லை எனில் உங்களால் அந்த வணிகத்தை தொடர முடியாது. இதை ரீடெய்ல் ட்ரேடர்ஸ் ஆகிய நாம் தெரிந்திருக்க அதிக வாய்ப்பு இல்லை.
இந்த சந்தையில் பத்து லாட் என்பது மிகச் சிறியது. பத்து லாட்டிற்கான வணிகத்தை எளிதில் பெற்று விடலாம். ஆனால் 10,000 லாட் வணிகத்தை ஏற்படுத்த வேண்டும் எனில் சற்று சிரமம். சில சமயம் institutional வணிகர்கள் நூறு ஆயிரம் லார்ட் வணிகத்தை கூட செய்வார்கள். அதற்கு சந்தையில் வணிகர்கள் இல்லாதபோது அவர்கள் அந்த வணிகர்களை வர முயற்சிப்பார்கள். அதாவது அவர்கள் பை (BUY) செய்ய விரும்பினால் அவர்களுக்கு செல்லர் (SELLER)தேவை. எனவே சந்தையை செல் திசையை நோக்கி நகர்த்துவார்கள். டெக்னிக்கல் டிரேடர்ஸ், indicator உபயோகிப்பவர்கள், ரெசிஸ்டன்ஸ் சப்போர்ட் பின்பற்றி வாணிகம் தொடர்பவர்கள் மேலும் பல டெக்னிக்கல் அனலைசிஸ் முறையை பின்பற்றுபவர்கள் அனைவரும் இதில் ஏமாற்றப்படுவார்கள்.
10,000 லாட் buy வணிகத்தை ஏற்படுத்த முதலில் ஆயிரம் லார்ட் செல் வணிகத்தை ஏற்படுத்துவார்கள். பெரிய volume எந்த திசையில் ஏற்படுத்தப்படுகிறது அந்த திசையை நோக்கி சந்தை நகர்வைத் தொடரும். பெரிய வால்யூம் என்பது BUY அல்லது SELL எந்த திசையில் அதிகம் உள்ளதோ அந்த திசையில் சந்தை நகரும். முதலில் செல் திசையில் பெரிய volume வணிகத்தை ஏற்படுத்தி தங்களுக்கு தேவையான (SELLERS)செல்லர்சை கொண்டு வந்து அவர்களிடமிருந்து BUY செய்துகொள்வார்கள். பின்பு சந்தை பை(BUY) திசைநோக்கி நகரத் தொடங்கும். (SELLER) செல்லர் அனைவரும் நஷ்டம் அடைவார்கள்.
முடிந்தவரை இதில் தெளிவுபடுத்த முயற்சித்துள்ளேன். மேலும் தெளிவாக தெரிந்து கொள்ள வீடியோ பதிவை பாருங்க .
Thursday, May 30, 2019
Wednesday, May 29, 2019
நிதி மேலாண்மை (MONEY MANAGEMENT)
வணக்கம்,
வணிகச் சந்தையில் நிதி மேலாண்மை செய்வது பற்றி காண்போம்.
நிதி மேலாண்மையில் முதன்மையானது எது?
சிலர் வணிகத்தை தொடங்கும்போது எவ்வளவு லாபம் சம்பாதிக்க வேண்டும் என்பதை மட்டுமே கவனத்தில் கொள்வர்.
சந்தையில் லாபம் சம்பாதிக்க வால்யூம் அல்லது lot size உள்ளீடு செய்தாலே போதும் என்று கருதுகின்றனர். அதை தான் முதன்மையாக கருதுகின்றனர். அது தவறு.
வணிகத்தை தொடங்கும்போது நம்முடைய நஷ்ட மதிப்பை கட்டுக்குள் வைத்துக் கொண்டாலே நல்ல லாபத்தை அடைய முடியும்.
எனவே சந்தையில் lot size உள்ளீடு செய்வதைவிட நஷ்ட எல்லை அதாவது stop loss தீர்மானிப்பதே முதன்மையானது.
வணிகத்தில் ஈடுபடும்போது stop loss அளவு தெரிந்தால் மட்டுமே நமக்குத் தேவையான lot size என்ன என்பதை கணக்கிட முடியும்.
நீங்கள் தேர்வுசெய்யும் lot size நீங்கள் வணிகத்தில் வெற்றியாளரா இல்லையா என்பதை தீர்மானிக்கும்.
நீங்கள் தேர்வுசெய்யும் lot sizeதான் உங்கள் வணிகத்தின் நஷ்ட அளவை கட்டுக்குள்வைக்க உதவும்.
உங்கள் வணிக உத்தி அல்லது வணிக முறை வெற்றி பெற lot size தேர்வு செய்வதில் கவனம் செலுத்த வேண்டும்.
எவ்வளவுதான் சிறந்த வணிக யுத்தியை பின்பற்றினாலும் தவறான lot size தேர்வினால் அது தோல்வியில் முடியலாம்.
Lot size நஷ்ட புள்ளிகளின் அளவை வைத்தே தீர்மானிக்கப்படுகிறது.
வெவ்வேறான சந்தையின் நிலவரம் நமக்கு வெவ்வேறு அளவிலான நஷ்ட புள்ளிகளை நமக்கு கொடுக்கும்.
எனவே lot size ஒவ்வொரு வணிகத்திற்கும் வேறுபடும்.
சரியான Lot size அளவை எப்படி கணக்கிடுவது?
Lot size அல்லது பொசிஷன் சைஸ் எவ்வாறு கணக்கிடுவது என்பதை பின்வரும் ஒரு ஃபார்முலா மூலமாக காண்போம்.
lot size = முதலீடு X ஒரு வணிகத்தின் நஷ்ட விகிதம்
------------------------------------------------------------------------
நஷ்ட எல்லை புள்ளி X புள்ளி நகர்வின் மதிப்பு
Lot size/ Volume = Capital X Risk per trade
----------------------------------
Stop loss pips X value per pip
அனைத்து வணிகத்திற்கும் ஒரே அளவிலான lot size தேர்வு செய்ய விரும்பினால் உங்களுடைய வணிக முறையில் கிடைக்கப்பெறும் சராசரி ஸ்டாப் லாஸ் அளவு புள்ளி அடிப்படையில் lot size கணக்கிட வேண்டும்.
புதிதாக வணிகம் தொடங்கும் வணிகர்கள் செய்யும் பொதுவான தவறு. ஒரு வணிகம் நஷ்ட திசையில் பயணிக்கும்போது நஷ்ட எல்லை புள்ளியை அதிகரித்துக்கொண்டே செல்வது ,
லாப எல்லையை அடைவதற்கு முன்பாகவே வணிகத்தை முடித்துக்கொள்வது,
வணிக முறையை சரிவர பின்பற்றாமல் இருப்பது
இந்த அனைத்து தவறுகளையும் சரி செய்து கொள்ள வேண்டும். நிதி மேலாண்மையில் இவை அனைத்தும் முக்கியமானவை.
நன்றி