இது பார் சார்ட் (bar chart) வகையை சார்ந்தது. இது முதன் முதலாக ஜப்பான் நாட்டில் 18 ஆம் நூற்றாண்டில் Munehisa Homma என்பவரால் அறிமுகபடுத்தபட்டது.

ஒற்றை கேண்டில்ஸ்டிக் வகைகள்:
ஹமர் மற்றும் ஹன்கிங் மேன் கேண்டில்ஸ்டிக்:
(Hammer and Hanging Man)
ஹமர் என்றால் சுத்தியல் என்று பொருள். ஹன்கிங் மேன் என்றால் தொங்கிகொண்டிருக்கும் மனிதன் என்று பொருள். இதை பார்பதற்கு அது போல காட்சி அளிப்பதால் வேடிக்கையாக இப்படி பெயர் வைத்து விட்டார்கள். இவிரண்டு கேண்டில்ஸ்டிக்கும் பார்பதற்கு ஒன்று போல் இருக்கும் ஆனால் price actionஐ பொருத்து இதன் பெயர்கள் மாறுபடும்.

இவ்விரண்டு கேண்டில்ஸ்டிக்கும் மார்கெட்டின் திசை மாறுவதற்கான வாய்ப்பு(reversal pattern) இருக்கிறது என்பதை முன்னரே உணர்த்துவதாகும்.
ஹமர் கேண்டில்ஸ்டிக் :
ஹமர் கேண்டில்ஸ்டிக் என்பது கீழிறங்கும் மார்க்கெட் மேலே திரும்புவதற்கான வாய்ப்பு(bullish reversal pattern) உள்ளது என்பதை உணர்த்துவதாகும்.
அடையாளங்கள் :
1. நிழலானது(wicks/shadow) அதன் உடம்பை (body) விட இரண்டு அல்லது மூன்று மடங்கு அதிகமாக இருக்க வேண்டும்.
2. மேல் பகுதியில் நிழலானது சிரயதாகவோ அல்லது இல்லாமலோ இருக்கலாம்
3.உடலானது(body) கேண்டில்ஸ்டிக்கின் மேல் பகுதியில்தான் இருக்க வேண்டும்.
4. இங்கு உடலின் நிறம் முக்கியம் இல்லை.
ஹன்கிங் மேன் கேண்டில்ஸ்டிக்:
ஹன்கிங் மேன் கேண்டில்ஸ்டிக் என்பது மேலே சென்று கொண்டிருக்கும் மார்க்கெட் கீழே இறங்குவதற்கான வாய்ப்பு (bearish reversal pattern) உள்ளது என்பதை உணர்த்துவதாகும்.
அடையாளங்கள் :
1. நிழலானது(wicks/shadow) அதன் உடம்பை (body) விட இரண்டு அல்லது மூன்று மடங்கு அதிகமாக இருக்க வேண்டும்.
2. மேல் பகுதியில் நிழலானது சிரயதாகவோ அல்லது இல்லாமலோ இருக்கலாம்
3.உடலானது(body) கேண்டில்ஸ்டிக்கின் மேல் பகுதியில்தான் இருக்க வேண்டும்.
4. இங்கு உடலின் நிறம் முக்கியம் இல்லை.
இன்வ்ர்ட் ஹமர் மற்றும் ஷூட்டிங் ஸ்டார் :
(Inverted Hammer and Shooting Star)

இன்வ்ர்ட் ஹமர் மற்றும் ஷூட்டிங் ஸ்டார் இவைகளும் பார்பதற்கு ஒன்று போல் காணப்படும். இவிரண்டுக்கும் உள்ள வித்தியாசம் ஏறுமுக மார்க்கெட் அல்லது இறங்குமுக மார்க்கெட்டில் ஏற்பட்டு உள்ளதா என்பதாகும். இவற்றிற்கு சிறிய உடல்(body) பகுதியும் நீளமான மேல் நிழல் பகுதியும்(upper shadow/wick), கீழ் நிழல்(lower shadow/wick) சிறியதாகவோ அல்லது இல்லாமலோ காணப்படும்.
இன்வ்ர்ட் ஹமர் ஆனது மார்க்கெட் கீழ் முகமாக இறங்கி கொண்டிருக்கும் போது மார்க்கெட் மேலே திருப்புவதற்கான வாய்பு உள்ளது என்பதை உணர்த்துகிறது.
ஷூட்டிங் ஸ்டார் என்பது இன்வ்ர்ட் ஹமர் போன்றே ஆனால் மார்க்கெட் மேல் முகமாக சென்று கொண்டிருக்கும் போது கீழே திரும்புவதற்கான வாய்பு உள்ளது என்பதை உணர்த்துகிறது.
இரட்டை கேண்டில்ஸ்டிக் வகைகள்
என்கல்பிங் கேண்டில்ஸ்டிக் (Engulfing Candles)
என்கல்பிங் (Engulfing) என்பதற்கு தமிழில் விழுங்குதல் அல்லது முடுதல் என்று பொருள். என்கல்பிங் கேண்டில்ஸ்டிக் என்பது முந்தய கேண்டில்ஸ்டிக்ஐ முடியபடி இருப்பதாகும்.
புல்லிஷ் என்கல்பிங்:
புல்(bull) = காளை . மார்க்கெட் மேலே உயர்வதை ஆங்கிலயத்தில் புல்லிஷ் என்று குறிபிடுவார்கள்.
பியர் (Bear) = கரடி , ஆங்கிலத்தில் மார்க்கெட் கீழே செல்வதை பியரிஸ் என்று குறிபிடுவார்கள்.
புல்லிஷ் என்கல்பிங்(bullish engulfing) என்பது மார்க்கெட் மேலே செல்வதற்கு அதிக வாய்பு உள்ளது என்பதை உணர்த்துகிறது. இது ஒரு பியரிஸ் கேண்டில்ஸ்டிக்ஐ தொடர்ந்து ஒரு பெரிய புல்லிஷ் கேண்டில்ஸ்டிக் தோன்றும் போது ஏற்படுகிறது. இங்கு இரண்டாவது கேண்டில்ஸ்டிக் முதலாவது கேண்டில்ஸ்டிக்ஐ மூடியபடி முடிந்து இருக்க வேண்டும். (படத்தை பார்க்க).
பியரிஸ் என்கல்பிங் என்பது புல்லிஷ் என்கல்பிங் க்கு ஏதிரானது.பியரிஸ் என்கல்பிங் என்பது மார்க்கெட் மேலே செல்வதற்கு அதிக வாய்பு உள்ளது என்பதை உணர்த்துகிறது. இது ஒருபுல்லிஷ் கேண்டில்ஸ்டிக்ஐ தொடர்ந்து ஒரு பெரிய பியரிஸ் கேண்டில்ஸ்டிக் தோன்றும் போது ஏற்படுகிறது. இங்கு இரண்டாவது கேண்டில்ஸ்டிக் முதலாவது கேண்டில்ஸ்டிக்ஐ மூடியபடி முடிந்து இருக்க வேண்டும். (படத்தை பார்க்க)