Monday, June 25, 2012

Margin Call என்றால் என்ன?

மார்ஜின் என்பது ஒரு வர்த்தகம் செய்ய தேவையான  முதலீட்டு  தொகை. உங்களுடைய கணக்கில் இருந்து ஒரு குறிப்பிட்ட தொகை அதாவது வர்த்தகம் செய்ய தேவையான தொகையை உங்கள் புரோக்கர் ஒதுக்குவது மார்ஜின்.

ஒரு வர்த்தகம் செய்ய தேவையான  மார்ஜின் அளவை தெரிந்து கொள்வதற்கான சூத்திரம்

மார்ஜின்  = யூனிட்  அளவு  X  கரன்சியின் விலை
                     ---------------------------------------------------------
                                        லிவெரேஜ்

யூனிட்  அளவு என்பது லாட்  சைஸ் அல்லது வாலுயுமின் அளவு.


1 மைக்ரோ லாட்  (0.01) என்பது 1,000 யூனிட்
1 மினி லாட்  (0.1) என்பது 10,000 யூனிட்
1 ஸ்டாண்டர்ட் லாட்  (1.00) என்பது 100,000 யூனிட்

1 மைக்ரோ லாட்  (0.01) வணிகம் செய்ய 1000$ தேவை .
1 மினி லாட்  (0.1)  வணிகம் செய்ய 10,000$ தேவை .
1 ஸ்டாண்டர்ட் லாட்  (1.00) வணிகம் செய்ய 100,000$ தேவை .

இதுவே உங்களது ப்ரோக்கர் 1:100 லிவெரேஜ் தருவதாக வைத்து கொள்வோம், அதவாது நம் முதலீட்டு தொகையை  விட 100 மடங்கு வணிகத்தை ஏற்படுத்தி கொள்ள முடியும்.

 1,000 யூனிட்
--------------------        = 10
100 லிவெரேஜ்

1 மைக்ரோ லாட்  (0.01) வணிகம் செய்ய 10$ போதுமானது  .
1 மினி லாட்  (0.1)  வணிகம் செய்ய 100$ போதுமானது .
1 ஸ்டாண்டர்ட் லாட்  (1.00) வணிகம் செய்ய 1000$ போதுமானது .
What is margin call? in tamil
மேலே  உள்ள படத்தில் மார்ஜின், பிரீ மார்ஜின் , மார்ஜின் லெவல் என்பவை எப்படி கண்டிட பட்டுள்ளது என  காண்போம் .

மார்ஜின்  = யூனிட்  அளவு  X  கரன்சியின் விலை
                     ---------------------------------------------------------
                                        லிவெரேஜ்

மேலே  உள்ள படத்தில் 2 ஸ்டாண்டர்ட் லாட்  (20,000 யூனிட்) EUR/USD  1.42976 என்ற விலையில் வாங்க பட்டுள்ளது.


                     =   200,000 X 1.42976

                     =   285,855.2
எனவே இந்த வணிகத்தை ஏற்படுத்த 285,855 $ மார்ஜின் தேவை .

ஆனால்,  ப்ரோக்கர் 1:100 லிவெரேஜ் தருவதால் 

                     =   200,000 X 1.42976
                          -----------------------   =  2,859.52$ போதுமானது.
                                 100

எனவே இந்த வணிகத்தை ஏற்படுத்த உபயோகப்படுத்தப்பட்ட மார்ஜின்  2,859$ ஆகும்.

பிரீ மார்ஜின் என்பது உபயோகப்படுத்தப்பட்ட மார்ஜினை ஈக்குட்டியில் கழித்தால் கிடைக்கும்.

ஈக்குட்டி என்பது உங்கள் லாப நஷ்ட தொகையை உங்கள் முதலீட்டு தொகையோடு கணிக்கிட்டு நடப்பு இருப்பு தொகை ஆகும் .

படத்தில் உள்ளபடி ஈக்குட்டி 10,050 $ (10,000 முதலீடு + 50$ லாபம் )

பிரீ மார்ஜின் = ஈக்குட்டி - உபயோகப்படுத்தப்பட்ட மார்ஜின்
                          = 10,050  -   2,859.52
                          = 7190.48
FREE  Margin   =  7190.48 (படத்தை பார்க்க)

What is margin call? in tamil


                                               
மார்ஜின்                 ஈக்குட்டி                                                                   
 சதவீதம் =   ---------------------------------------   x 100
                         உபயோகப்படுத்தப்பட்ட
                                          மார்ஜின்
                 
                                           10,050 
                                      =  ---------------   x  100
                                          2,859.52

                                      =  351.46 %

இந்த மார்ஜின் சதவீதம் உங்களுடைய வணிகம் நஷ்டத்தில் செல்லும் போது  குறைந்து கொன்டே செல்லும். 100% கீழ் செல்லும் போது  உங்கள் ப்ரோக்கர் உங்களுக்கு ஒரு எச்சரிக்கை விடுப்பார்கள்.
Margin call
சிவப்பு நிறத்தில் டெர்மினல் படத்தில் உள்ளவாறு மாறும் . இதுவே மார்ஜின் கால் எனப்படும். அதாவது உங்கள் வணிகத்திற்கு போதுமான மார்ஜின் தொகை இல்லை  என்பதை சுட்டி காட்ட விடப்படும் அழைப்பு. உங்கள் வணிகம் லாப திசைக்கு மாறாத பட்சத்தில்  போதுமான மார்ஜின் இல்லை  என்றால் உங்கள் வர்த்தகம் உங்கள் ப்ரோக்கர் ஆல்  முடித்து வைக்கப்படும்.


மார்ஜின் காலை தடுக்க சரியான லாட்  தேர்வு செய்து முறையான வர்த்தக மேலாண்மையை கடைபிடித்தால் தவிர்க்கலாம். சரியான லாட்  தேர்வு செய்து எப்படி மற்றும் வர்த்தக மேலாண்மை பற்றி என் யூடூப்பில்  பதிவிட்டுள்ளேன்.

மார்ஜின் காலை பற்றிய தெளிவான காணொளி


No comments:

Post a Comment