Wednesday, October 14, 2020

Top 10 Chart Pattern - சிறந்த 10 விளக்கப்பட வடிவங்கள்.


 விளக்கப்படம் வடிவங்கள் தொழில்நுட்ப பகுப்பாய்வின் ஒருங்கிணைந்த அம்சமாகும்.ஆனால் அவை திறம்பட பயன்படுத்தப்படுவதற்கு அவற்றைப் எவ்வாறு எங்கு எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதை தெருந்துஇருக்க வேண்டும் .

ஒரு விளக்கப்படம் என்பது கடந்த காலங்களில் சந்தை  ஏற்படுத்திய நகரவுகளின்  அடிப்படையில் உருவானது, அது  அடுத்து சந்தையில்  என்ன நகர்வுகளை ஏற்படுத்த கூடும்  என்பதைக் குறிக்க உதவுகிறது. 

உங்களுக்கு உதவ, ஒவ்வொரு வர்த்தகரும் தெரிந்து கொள்ள வேண்டிய 10 விளக்கப்பட வடிவங்கள் இங்கே.


Top 10 chart patterns

Head and shoulders - தலையும் தோள்களும்

Double top - இரட்டை மேல் முனை.

Double bottom - இரட்டை கீழ்  முனை.

Rounding bottom - கீழ் வளைவு  வடிவம்.

Cup and handle -  கோப்பை மற்றும் கைப்பிடி

Wedges - ஆப்பு

Pennant or flags - பென்னன்ட அல்லது கொடி வடிவும் 

Ascending triangle - ஏறும் முக்கோணம்

Descending triangle - இறங்கு முக்கோணம்

Symmetrical triangle - சமச்சீர் முக்கோணம்


Head and shoulders - தலையும் தோள்களும்

"தலை மற்றும் தோள்கள்" ஒரு விளக்கப்பட வடிவமாகும், இது நடுவில்  ஒரு பெரிய சிகரம் அதன் இருபுறமும் சற்று சிறிய சிகரம் கொண்ட வடிவத்தை கொண்ட அமைப்பு ஆகும்.

இந்த வடிவமானது சந்தை ஏறுமுகத்தில் இருந்து இறங்குமுகமாக மாறுவதற்கான ஒரு அமைப்பு ஆகும்.

பொதுவாக, முதல் மற்றும் மூன்றாவது சிகரம் இரண்டாவது விட சிறியதாக இருக்கும்.  அதாவது நடுவில் இருக்கும் கூர்மையான அமைப்பின் உயரம் இரு புறமும் இருக்கும் உயரத்தை விட அதிகமாக இருக்கும்.

Double top - இரட்டை மேல் முனை.

வர்த்தகர்கள் பயன்படுத்தும் முக்கியமான தொழில்நுட்ப பகுப்பாய்வுகளில்  இரட்டை மேல் முனையும் (Double top) ஒன்று ஆகும்.
இரட்டை மேல் முனை ஒரு 'M' வடிவத்தைக் கொண்டுள்ளது மற்றும் இது சந்தை கீழ் நோக்கி திசை திரும்புவதற்கான ஒரு சமிக்கையை தருகிறது.

Double bottom - இரட்டை கீழ்  முனை.

வர்த்தகர்கள் பயன்படுத்தும் முக்கியமான தொழில்நுட்ப பகுப்பாய்வுகளில்  இரட்டை கீழ்  முனையும் (Double bottom) ஒன்று ஆகும்.
இரட்டை கீழ்  முனை ஒரு 'W' வடிவத்தைக் கொண்டுள்ளது மற்றும் இது சந்தை மேல் நோக்கி திசை திரும்புவதற்கான ஒரு சமிக்கையை தருகிறது.

Rounding bottom - கீழ் வளைவு  வடிவம்.


ஒரு 'U' வடிவத்தைக் கொண்டுள்ளது மற்றும் இது சந்தை மேல் நோக்கி திசை திரும்புவதற்கான ஒரு சமிக்கையை தருகிறது.

இது சந்தை சரிவின் (Bearish) முடிவையும் சந்தை உயர்வுக்கான (Bullish) ஆரம்பம் என்பதை  குறிக்கிறது.




Cup and handle -  கோப்பை மற்றும் கைப்பிடி.

ஒரு கப் மற்றும் கைப்பிடி என்பது ஒரு கோப்பையை போன்று காட்சி  அளிக்கும்  விளக்கப்படம் மற்றும் கோப்பை ஒரு "U " வடிவத்தில் இருக்கும் மற்றும் கைப்பிடி சற்று கீழ்நோக்கி சாய்வான கோடு  போன்று கீழ் உள்ள படத்தில் உள்ளது போல் இருக்கும். இந்த அமைப்பு சந்தை தொடர்ந்து மேல்  நோக்கி செல்வதற்கான சமிக்கையை தருகிறது .



Wedges - ஆப்பு.


சந்தையின் விலை இயக்கங்கள் இரண்டு சாய்வான போக்குக் கோடுகளுக்கு இடையில் இறுக்கமாக ஆப்பு போன்று வடிவில் உருவாகிறது.

ஆப்பு (Wedge) இரண்டு வகைகள் உள்ளன: உயரும் மற்றும் வீழ்ச்சி வெட்ஜெஸ் .


உயரும் வெட்ஜ் (Rising Wedge)


வீழ்ச்சி வெட்ஜ் (Falling Wedge)


Pennant or flags - பென்னன்ட அல்லது கொடி வடிவும் 

கொடிகள் மற்றும் பென்னன்ட்கள் விளக்கப்படங்கள் குறுகிய கால தொடர்ச்சியான முறைகள் (Short term continuation) ஆகும், அவை முந்தைய போக்கை அல்லது நகர்வை மீண்டும் தொடங்குவதற்கு முன்பு ஒரு சிறிய சுணக்கத்தை (consolidation) ஏற்படுத்தும். இந்த வடிவங்கள் வழக்கமாக ஒரு பெரிய நகர்வு ஏற்படுவதற்க்கு  முன்பு தோன்றுவது ஆகும் .







Ascending triangle - ஏறு முக்கோணம்


விலையின் நகர்வுகளுக்கு ஏற்ப இந்த அமைப்பு ஏற்படுத்த படுகிறது. இது ஒரு கிடைமட்ட கோட்டை ஸ்விங் உயரத்துடனும் (Highs),  ஒரு சாய்வு உயர போக்கு கோடானது ஸ்விங் தாழ்வோடும்(lows) இணைத்து வரைய கூடியது .



Descending triangle - இறங்கு முக்கோணம்


இறங்கு முக்கோணம் என்பது அதன் கிடைமட்ட போக்கு கோடு வரிசையில் கீழே ஆதரவையும்(Support ), இறங்கு செங்குத்து போக்கு கோடு வரிசையில் உயர்வையும்(Resistance) கொண்ட ஒரு விளக்கப்படம் ஆகும்.



Symmetrical triangle - சமச்சீர் முக்கோணம்

ஒரு சமச்சீர் முக்கோணம் என்பது தொடர்ச்சியான உயர்வுகளையும் தாழ்வுகளையும் இணைக்கும் இரண்டு ஒன்றிணைக்கும் போக்கு கோடுகளால் வகைப்படுத்தப்படும் ஒரு விளக்கப்படம். போக்கு கோடுகள்(Trend Lines) தோராயமாக சம சரிவில் ஒன்றிணைந்திருக்கும்.




No comments:

Post a Comment