Thursday, May 30, 2019
Wednesday, May 29, 2019
நிதி மேலாண்மை (MONEY MANAGEMENT)
1:21 AM
forex class in chennai, forex class in tamil, forex money management in tamil, free forex training
No comments
வணக்கம்,
வணிகச் சந்தையில் நிதி மேலாண்மை செய்வது பற்றி காண்போம்.
நிதி மேலாண்மையில் முதன்மையானது எது?
சிலர் வணிகத்தை தொடங்கும்போது எவ்வளவு லாபம் சம்பாதிக்க வேண்டும் என்பதை மட்டுமே கவனத்தில் கொள்வர்.
சந்தையில் லாபம் சம்பாதிக்க வால்யூம் அல்லது lot size உள்ளீடு செய்தாலே போதும் என்று கருதுகின்றனர். அதை தான் முதன்மையாக கருதுகின்றனர். அது தவறு.
வணிகத்தை தொடங்கும்போது நம்முடைய நஷ்ட மதிப்பை கட்டுக்குள் வைத்துக் கொண்டாலே நல்ல லாபத்தை அடைய முடியும்.
எனவே சந்தையில் lot size உள்ளீடு செய்வதைவிட நஷ்ட எல்லை அதாவது stop loss தீர்மானிப்பதே முதன்மையானது.
வணிகத்தில் ஈடுபடும்போது stop loss அளவு தெரிந்தால் மட்டுமே நமக்குத் தேவையான lot size என்ன என்பதை கணக்கிட முடியும்.
நீங்கள் தேர்வுசெய்யும் lot size நீங்கள் வணிகத்தில் வெற்றியாளரா இல்லையா என்பதை தீர்மானிக்கும்.
நீங்கள் தேர்வுசெய்யும் lot sizeதான் உங்கள் வணிகத்தின் நஷ்ட அளவை கட்டுக்குள்வைக்க உதவும்.
உங்கள் வணிக உத்தி அல்லது வணிக முறை வெற்றி பெற lot size தேர்வு செய்வதில் கவனம் செலுத்த வேண்டும்.
எவ்வளவுதான் சிறந்த வணிக யுத்தியை பின்பற்றினாலும் தவறான lot size தேர்வினால் அது தோல்வியில் முடியலாம்.
Lot size நஷ்ட புள்ளிகளின் அளவை வைத்தே தீர்மானிக்கப்படுகிறது.
வெவ்வேறான சந்தையின் நிலவரம் நமக்கு வெவ்வேறு அளவிலான நஷ்ட புள்ளிகளை நமக்கு கொடுக்கும்.
எனவே lot size ஒவ்வொரு வணிகத்திற்கும் வேறுபடும்.
சரியான Lot size அளவை எப்படி கணக்கிடுவது?
Lot size அல்லது பொசிஷன் சைஸ் எவ்வாறு கணக்கிடுவது என்பதை பின்வரும் ஒரு ஃபார்முலா மூலமாக காண்போம்.
lot size = முதலீடு X ஒரு வணிகத்தின் நஷ்ட விகிதம்
------------------------------------------------------------------------
நஷ்ட எல்லை புள்ளி X புள்ளி நகர்வின் மதிப்பு
Lot size/ Volume = Capital X Risk per trade
----------------------------------
Stop loss pips X value per pip
அனைத்து வணிகத்திற்கும் ஒரே அளவிலான lot size தேர்வு செய்ய விரும்பினால் உங்களுடைய வணிக முறையில் கிடைக்கப்பெறும் சராசரி ஸ்டாப் லாஸ் அளவு புள்ளி அடிப்படையில் lot size கணக்கிட வேண்டும்.
புதிதாக வணிகம் தொடங்கும் வணிகர்கள் செய்யும் பொதுவான தவறு. ஒரு வணிகம் நஷ்ட திசையில் பயணிக்கும்போது நஷ்ட எல்லை புள்ளியை அதிகரித்துக்கொண்டே செல்வது ,
லாப எல்லையை அடைவதற்கு முன்பாகவே வணிகத்தை முடித்துக்கொள்வது,
வணிக முறையை சரிவர பின்பற்றாமல் இருப்பது
இந்த அனைத்து தவறுகளையும் சரி செய்து கொள்ள வேண்டும். நிதி மேலாண்மையில் இவை அனைத்தும் முக்கியமானவை.
நன்றி
Subscribe to:
Posts (Atom)