Saturday, June 8, 2019

வங்கிகள் சிறு வணிகர்களை நஷ்டம் அடைய வைக்கின்றனவா? Does Banks manipulating the trading in Forex ?

வணக்கம்,

Forex வணிகத்தில் institutional வணிகர்கள் (Retail Traders)ரீடெய்ல் வணிகர்களை நஷ்டம் அடைய வைக்கின்றனவா?

சில டிரேடர்கள் தங்களுடைய  டிரேடிங்(Trading) தொடர்ந்து கண்காணிக்கப்படுவதாகவும் அவர்களுடைய  stop loss விலையை சந்தை அடைந்த பின்னர் டேக் ப்ராபிட் (Take Profit) திசை நோக்கி நகர்வதாக கருதுகின்றனர்.  அதாவது யாரோ பின்புலத்திலிருந்து வேண்டுமென்றே அவர்களை நஷ்டமடைய வைப்பதாக கருதுகின்றனர். இது உண்மையா?

இது ஒரு வகையில் உண்மை.  முற்றிலும் உண்மை அல்ல. இதை மேலும் விளக்கமாக காண்போம்.

இந்த சந்தையானது பையர் செல்லர் (Buyer & Seller)  அதாவது வாங்குபவர் மற்றும் விற்பவர் இருவராலும் நகர்த்தப்படும் ஒரு சந்தை.  வாங்கலும் விற்றலும் நடைபெறவில்லை என்றால் சந்தையில் நகர்வு என்பது இருக்காது.

அதுபோல்  சந்தையில் ஏற்கனவே செல்லர் இருந்தால்தான் பையர் buy பண்ண முடியும்.

ஒரு செல்லர்(SELLER) கூட இல்லையெனில் உங்களால் (BUY)பை பண்ணவே  முடியாது. இந்த சந்தை 24 மணி நேரமும் மிக அதிக அளவிலான பணம் மற்றும் வணிகர்களை கொண்டு உலகம்  முழுவதும் வணிகம் நடைபெறுவதால் பை மற்றும் செல்லிங் (BUYING & SELLING ) ஒவ்வொரு நொடிக்கு நொடி நடந்து கொண்டே இருக்கிறது.  ஆனால் உதாரணமாக நீங்கள் ஒரு பத்து லாட் பை (BUY) செய்ய விரும்பினால் பத்து லாட் செல்லர்(SELLER) இருக்க வேண்டும் இல்லை எனில் உங்களால் அந்த வணிகத்தை தொடர முடியாது. இதை ரீடெய்ல் ட்ரேடர்ஸ் ஆகிய நாம் தெரிந்திருக்க அதிக வாய்ப்பு இல்லை.

இந்த சந்தையில்  பத்து லாட் என்பது மிகச் சிறியது.  பத்து லாட்டிற்கான வணிகத்தை எளிதில் பெற்று விடலாம்.  ஆனால் 10,000 லாட் வணிகத்தை ஏற்படுத்த வேண்டும் எனில் சற்று சிரமம். சில சமயம் institutional  வணிகர்கள் நூறு ஆயிரம் லார்ட் வணிகத்தை கூட செய்வார்கள். அதற்கு சந்தையில் வணிகர்கள் இல்லாதபோது அவர்கள் அந்த வணிகர்களை வர முயற்சிப்பார்கள்.  அதாவது அவர்கள் பை (BUY) செய்ய விரும்பினால் அவர்களுக்கு செல்லர் (SELLER)தேவை. எனவே சந்தையை செல் திசையை நோக்கி நகர்த்துவார்கள். டெக்னிக்கல் டிரேடர்ஸ்,   indicator உபயோகிப்பவர்கள், ரெசிஸ்டன்ஸ் சப்போர்ட் பின்பற்றி வாணிகம் தொடர்பவர்கள் மேலும் பல டெக்னிக்கல் அனலைசிஸ் முறையை பின்பற்றுபவர்கள் அனைவரும் இதில் ஏமாற்றப்படுவார்கள்.
10,000 லாட் buy வணிகத்தை ஏற்படுத்த முதலில் ஆயிரம் லார்ட் செல் வணிகத்தை ஏற்படுத்துவார்கள்.  பெரிய volume எந்த திசையில் ஏற்படுத்தப்படுகிறது அந்த திசையை நோக்கி சந்தை நகர்வைத் தொடரும். பெரிய வால்யூம் என்பது  BUY அல்லது SELL எந்த திசையில் அதிகம் உள்ளதோ அந்த திசையில் சந்தை நகரும். முதலில் செல் திசையில் பெரிய volume வணிகத்தை ஏற்படுத்தி தங்களுக்கு தேவையான  (SELLERS)செல்லர்சை கொண்டு வந்து அவர்களிடமிருந்து BUY செய்துகொள்வார்கள். பின்பு சந்தை பை(BUY) திசைநோக்கி நகரத் தொடங்கும். (SELLER) செல்லர் அனைவரும் நஷ்டம் அடைவார்கள்.

முடிந்தவரை இதில் தெளிவுபடுத்த முயற்சித்துள்ளேன்.  மேலும் தெளிவாக தெரிந்து கொள்ள வீடியோ பதிவை பாருங்க .

0 comments:

Post a Comment